வெளிநாட்டு சுற்றுலாவை சுழற்றிய ஜல்லிக்கட்டு மீண்டும் களைகட்டத் துவங்கியது முன்பதிவு!

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், விளையாட்டை பார்ப்பதற்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முன்பதிவு, மீண்டும் களைகட்டத்துவங்கியுள்ளது.மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்களை, சுற்றுலாத்துறை
அலங்காநல்லுாருக்கு அழைத்துச் செல்லும்.கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், வெளிநாட்டு பயணிகள் பலர் தங்கள் பயண திட்டங்களை அமைத்து ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஜனவரியில், மதுரை வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் சுற்றுலா நிறுவனங்களும் கவலையடைந்தன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளன.
சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், குறைந்த எண்ணிக்கையில் அலங்காநல்லுாருக்கு சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுலா துவங்கியது.
பின்னர் படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்தது. 2014 ல் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க 175 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று நேற்று வெளியான அறிவிப்பை தொடர்ந்து, சுற்றுலா நிறுவனங்கள் மூலம் முன்பதிவுகள் நேற்று துவங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான பயணிகள் வருவார்கள். அந்த அளவிற்கு விபரங்களை
கேட்கின்றனர், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...