தை பிறந்தால் வழி பிறக்கும்!

வாசல்களே,
உங்கள்
குப்பைகளைக் கழித்து
கோலத்தின் முத்ததுக்காய்
குளித்துக் காத்திருங்கள்.

சுவர்களே
உங்கள் அழுக்கு ஆடைகளை
சுண்ணாம்பு
வேட்டிகளால்,
சுற்றி மறையுங்கள்.


கொட்டில் மாடுகளே
வாருங்கள்,
உங்கள் தொட்டில்
முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

புதிய பானைகளே
பொறுத்திருங்கள்,
உங்கள் உள்ளம் பொங்கி வழிய
இதோ
நாள்காட்டிகளும்
பட படக்கின்றன.

வயல்காற்றே வாருங்கள்
எங்கள்
வியர்வையின் ஈரத்தை
உணவின் சாரமாக மாற்றியது
நீங்கள் தான்.
திண்ணையில் வந்தமருங்கள்.

பூமித் தாயே
பெருமிதம் கொள்,
நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை
இன்னும் எங்கள்
கணிணிக் கூடங்களால்
தயாரிக்க இயலவில்லை.

எல்லோரும் வாருங்கள்,
மனம் பொங்க மகிழுங்கள்
இது
தமிழர் கலாச்சாரத்தின்
தனி அடையாளம்.

அறுவடையின் ஆனந்தத்திலும்,
வறுமையின் வேதனையிலும்,
நன்றி மறக்காத
என் தமிழ்த் தலைமுறையின்
தன்மான அடையாளம்.

கலாச்சார வேர்களை
ஆழ உழுது வை.
வயலில்லையேல் செயலில்லை
என்பதை
சிந்தையில் தை.

இதோ
வந்து விட்டது தை.

இன்பமே பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் , இதயங்களிலும் !

அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும்
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் !

குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும்
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் !

அநீதிகள் அகன்று நீதியே நிலைக்கட்டும்
அகிலமே ஆனந்தத்தில் இனி மிதக்கட்டும் !

 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துகள் !!!

என்றென்றும் அன்புடன் உங்கள் இர.காந்தி...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...