ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும், "புன்னகையை தேடி-?

ஆதரவற்ற குழந்தைகளை மீட்கும், "புன்னகையை தேடி-2'

 திட்ட பணிகளுக்கு, பொதுமக்கள் ஒத் துழைப்பு தர வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தை களை
கண்டறியும், "புன்னகையை தேடி' என்ற திட்டம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கடந்தாண்டு ஜூலையில் செயல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், சுற்றுலா தலங்கள், ஆதரவற்றோர் விடுதிகளில், அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு பிரசாரம் மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில், 12 குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தாண்டு, "புன்னகையை தேடி-2' திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் வாரியாக, குழந்தைகள் நலன் சார்ந்த அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. வரும், 31 வரை, மாவட்டம் முழுவதும், குழந்தைகள் மீட்பு குழுவினர், பிரசாரம் மேற்கொள்வர்.

திருப்பூர் மாவட்டத்தில், இப்பணியை மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. "மாவட்ட அளவில் ஒன்பது குழுக்கள் அமைத்து, தாலுகா வாரியாக பிரசாரம் செய்வது; ஆதரவற்ற நிலையில் சுற்றும் குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிக்கச் செய்வது; இத்திட்ட பணிக்கு, மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

ஆதரவற்ற குழந்தைகள் குறித்து, 1098 என்ற இலவச, "சைல்டு லைன்' எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...