சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல்!

நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி.,சார்பில், தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், வனத்துறை பணிகளுக்கும், தனி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும், யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் பட்டியல், ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படும். நடப்பாண்டுக்கான உத்தேச பட்டியல், தற்போது வெளியாகி உள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் தேதி, ஏப்., 23ல் துவங்கி, மே, 20ல் முடிகிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, முதன்மை தேர்வு, டிச., 3 முதல், ஐந்து நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...