சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜி.ரோகிணியின் பெயரை, நீதிபதிகள் தேர்வு குழுவான, 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக மாற்றப்படுகிறார். அங்கு, தலைமை
நீதிபதியாக இருக்கும், தனஞ்ஜெய யஷ்வந்த் சந்திரசூட், டில்லிக்கு மாற்றப்படுகிறார். இதேபோல், ராஜஸ்தான், கர்நாடகா, கவுஹாத்தி மற்றும் மேகாலயா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த இடங்களுக்கும், புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை, கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி ரோகிணி, 60, ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.