சட்டசபை தேர்தல்அதிகாரிகளுக்கு பயிற்சி!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி,மாநில, மாவட்ட அளவிலான தேர்தல் பயிற்சி அதிகாரிகளுக்கான, நான்கு நாட்கள் பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட
அறிக்கை:பயிற்சி அதிகாரிகளுக்கு, சென்னை, அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில், நேற்று முதல், திறமை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; 13ம் தேதி வரை நடக்கும். இந்த பயிற்சியில், மாநில தேர்தல் பயிற்சி அதிகாரிகள், மாவட்ட பயிற்சி அதிகாரிகள், 94 பேர் பயிற்சி பெறுகின்றனர். அடுத்த கட்டமாக, ஈரோடு மாவட்டம், பவானி சாகரில், 49 அதிகாரிகளுக்கு, 19 முதல், 22 வரை பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...