ரயில்வேயில் வேலை பெறுவதில் கேரள பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் தமிழக ரயில்வே ஸ்டேஷன்களில் பரவலாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.ரயில்வே துறையில் சென்னை 'ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு' மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் நடைபெறுகிறது. தண்டவாளங்களை பராமரிக்கும் 'டிராக்மேன்' போன்ற
பணியிடங்களுக்கு சென்னை 'ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல்' (ஆர். ஆர்.சி) மூலம் பணி நியமனம் நடக்கிறது.
ஆர்.ஆர்.சி.,மையங்கள் தென்னிந்தியாவில் சென்னை, திருச்சி, சேலம்,மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 இடங்களில் உள்ளன. ரயில்வே துறையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை 'டிராக்மேன்' (கேங் மேன்) பணியில் இருந்த பெரும்பாலான ஆண் தொழிலாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அப்பணிக்கு ஒரு சில ஆண்கள் மட்டுமே விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் குறை இருந்தால் அவற்றை பராமரிக்கும் வேலைக்கு பெண்கள் விண்ணப்பிப்பது இல்லை.
ஆனால்,அண்டை மாநிலமான கேரளாவில் இப்பணிக்கு ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து, தேர்வில் வெற்றி பெறுகின்றனர். 10 ம் வகுப்பு படித்தவர்கள் இத்தேர்வுக்கு தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டாலும்,கேரள இளநிலை, முதுநிலை பட்டதாரி பெண்கள் பலர், தமிழக பெண்களின் மன நிலையை அறிந்து கொண்டு, ஆர்வத்துடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று,இப்பணியில் சேர்ந்து வருகின்றனர்.
இவர்கள் திருவனந்தபுரம், பாலக்காடு போன்ற கேரள மாநிலத்திற்குள் உள்ள ரயில் நிலையங்களில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் நியமனம் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 45 'டிராக் விமன்' கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்கள் காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், பனகுடி, சிவகங்கை, மானாமதுரை,மேல கொன்னன்குளம், சூடியூர், பரமக்குடி ஆகிய 9 ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையத்திற்கு தலா 5 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக ரயில்வே தொழிலாளர்களுக்கான உடையணிந்து தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இவர்கள் கூறுகையில்,' முதலில் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.
அதன் பிறகு அவ்வப்போது நடத்தப்படும் ரயில்வே தேர்வுகளை தவறாமல் எழுதி, வெற்றி பெற்று பதவி உயர்வு பெற்று விடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இப்பணியில் சேர்ந்த பலர் இன்றைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்,' என்றனர்.
இது தவிர, ரயில்வே ஸ்டேஷன்களில் 'டிராபிக்' பணியிலும் கேரள பெண்கள் பலர் சேர்ந்துள்ளனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் இப்பணியிலும் 4 பேர் வரை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.