இரண்டு தகுதித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வான "செட்' தேர்வுத் தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு லட்சக்கணக்கான முதுநிலைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடையே எழுந்துள்ளது.
மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
(சி.டி.இ.டி.) தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.
2016-ஆம் ஆண்டுக்கான முதல் சி.டி.இ.டி. தேர்வு வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுத் தேதியை பல மாதங்களுக்கு முன்னரே சிபிஎஸ்இ அறிவித்துவிட்டது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு: இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமானது, கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்தத் தேர்வு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த "செட்' தேர்வும் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான முதுநிலைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நெட்- செட் சங்க நிர்வாகி சுவாமிநாதன் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் "நெட்' தேர்வுக்கும், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் "செட்' தேர்வுக்கும் குறைந்தபட்சக் கல்வித் தகுதி முதுநிலைப் பட்டப்படிப்புதான். இதன் காரணமாக, பள்ளி ஆசிரியர் பணிக்கான சி.டி.இ.டி. தேர்வு எழுதுகிற அனைவரும், இந்த நெட், செட் தேர்வுகளை எழுதுவதும் வழக்கம்.
தேதியை மாற்ற வேண்டும்: 2016-ஆம் ஆண்டுக்கான சி.டி.இ.டி. தேர்வு 21-2-2016 அன்று நடைபெறும் எனப் பல மாதங்களுக்கு முன்னரே சி.பி.எஸ்.இ. அறிவித்துவிட்டது. இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வும் அதே தேதியில், அதாவது 21-2-2016 அன்றே நடத்தப்படும் என அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இதனால், சி.டி.இ.டி. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பல லட்சம் பேர் "செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு "செட்' தேர்வுத் தேதியை பல்கலைக்கழகம் மாற்றி அமைக்க வேண்டும் என்றார் அவர்.
25 பாடங்களுக்கு அனுமதி: இதுகுறித்து அன்னைத் தெரசா பல்கலைககழகப் பதிவாளர் என். கலா கூறியதாவது:
பல்கலைக்கழகக் குழுவுடன் தீவிரமாக ஆலோசித்து, பல்வேறு தேர்வுகளைக் கவனத்தில் கொண்டுதான் இந்தத் தேதியை நிர்ணயித்துள்ளோம். இதே தேதியில் சி.டி.இ.டி. தேர்வு நடைபெற உள்ளது என்பது இப்போதுதான் தெரிகிறது. எனவே, இதுகுறித்து உயர் கல்வித் துறைச் செயலருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் யுஜிசி "செட்' தேர்வை நடத்த அனுமதித்திருக்கிறது. அதோடு, 25 பாடங்களுக்கு இந்தத் தேர்வை நடத்துவதற்குத்தான் இப்போது அனுமதி அளித்திருக்கிறது.
எனவே, நூலக அறிவியல், இசை, பொது நிர்வாகம் உள்ளிட்ட பிற பாடங்களை அடுத்த முறை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
"செட்' தேர்வில் விடுபட்டுள்ள பாடங்கள்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள "செட்' தேர்வில் நூலக அறிவியல் உள்பட 5-க்கும் மேற்பட்ட பாடங்கள் விடுபட்டுள்ளதால், அந்தப் பாடங்களில் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை தனியார் பல்கலைக்கழக நூலகர் முருகானந்தம் கூறியதாவது: பல்கலைக்கழக, கல்லூரி நூலகர் பணியிடத்துக்கு முதுநிலை நூலகர் பட்டப் படிப்புடன் செட் அல்லது நெட் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, கடந்த 2012 வரை நடத்தப்பட்ட "செட்' தேர்வுகளில் நூலக அறிவியல் பாடமும் சேர்க்கப்பட்டிருந்தது. சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் "நெட்' தேர்விலும் இந்தப் பாடம் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இப்போது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "செட்' தேர்வில் நூலக அறிவியல் பாடம் மட்டுமன்றி இசை, பொது நிர்வாகம், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களும் விடுபட்டுள்ளன. இதனால், இந்தப் பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்று பல ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கும் ஆயிரக்கணக்கானோரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இந்தப் பாடங்களையும் "செட்' தேர்வில் சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார் அவர்.