தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தனது தொகுதிக்குட்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு பகுதியினரை வரவழைத்து பொங்கல் கவனிப்பு வழங்கியுள்ளார். இதையறிந்த கிராம மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர இருப்பதால் இந்த பொங்கல் பண்டிகைக்கு அமைச்சர்கள் தொகுதி மக்களை விழுந்து, விழுந்து
கவனிக்கின்றனர். தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பொங்கல் பண்டிகைக்கு தனது சொந்த ஊரான மோளையனூருக்கு வந்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனக்கு விசுவாசமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரையும் வரவழைத்து ஜெயலிதா ஸ்டிக்கர் ஒட்டிய பொங்கல் பரிசு வழங்கினார். அதில் ஆட்களுக்கு தகுந்தாற்போல் ரொக்கபரிசு, பேண்ட், சர்ட் என இருந்தது. நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் திடீரென புறப்பட்டு சென்றுவிட்டார். இதையடுத்து இலவச பரிசு வழங்குவது நேற்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மோளையானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிப்பட்டி, ஜங்காலப்பட்டி, பைரநத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் நேற்று காலை முதல் உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் வீட்டிற்கு படையெடுத்தனர். நூற்றுக்கணக்கானோர் கூட்டமாக அமைச்சர் வீட்டின் முன்பு திரண்டு, தங்களுக்கும் இலவச பரிசு வழங்க வேண்டும். ‘‘யார், யாருக்கோ அமைச்சர் கூப்பிட்டு, கூப்பிட்டு பொங்கல் பரிசு கொடுக்கிறாராம். ஓட்டு போட்ட எங்களுக்கு ஒண்ணுமில்லையா. எப்ப தேர்தல் வந்தாலும் நாங்க தான ஓட்டு போடறோம்,’’ என அங்கிருந்த அமைச்சரின் உறவினர்கள், ஊழியர்களிடம் முறையிட்டனர்.
தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், அமைச்சர் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், கடந்த நான்காண்டுகளாக பொங்கல் பரிசு வழங்காத நிலையில், திடீரென அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.