பொங்கல் பண்டிகையை முன்னிட்ட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு, போனஸ் மற்றும் சிறப்பு மிகை ஊதியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:
* 'சி' மற்றும் 'டி' பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு, 30 நாட்கள் ஊதியத்திற்கு மிகை ஊதியம் வழங்கப்படும்.
*'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள், 240 நாட்கள், அதற்கு மேல் பணி
புரிந்த, முழு நேர, பகுதி நேர, தொகுப்பூதிய, சிறப்பு கால முறை
ஊதியத்தில் பணியாற்று வோர், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர், ஊராட்சி உதவியாளர், ஒப்பந்த பணியாளர், தற்காலிக பணியாளர், தினக்கூலிகள், தினக்கூலியாக இருந்து, நிரந்தர பணியில் மாற்றப்பட்டோருக்கு, 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
*உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பணி புரிவோர், பல்கலை மானியக்குழு, தொழில்புட்பக்கல்வி, வேளாண் ஆராய்ச்சிக்கழக சம்பள விகிதம் பெறவோருக்கும் மிகை, சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.
*ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதனால், அரசுக்கு, 326.85 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.