தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி : காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை உறுதிபடுத்தினார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். பல்வேறு நாட்களாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்று வந்தன. அலங்காநல்லூரில் இதற்காக சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. இன்றைக்கு கூட கடையடைப்பு போராட்டங்களும், நடைபெற்று வந்தன. இந்நிலையில் இத்தகவலை மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. பட்டாசு வெடித்து கொண்டாட்டம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...