5ஜி’ சேவை வழங்க மொபைல் போன் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘பேஸ்புக்’ அழைப்பு!!!

சமூக வலை­தள நிறு­வ­ன­மான பேஸ்புக், 5ஜி அகண்ட அலை­வ­ரிசை சேவையை வழங்­கு­வ­தற்கு ஏற்ற வகையில், மின்னல் வேக தகவல் பரி­மாற்­றத்­திற்­கான வச­தி­க­ளுடன் மொபைல்­ போன்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக, மொபைல் போன் நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுக்க உள்­ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்­சி­லோனா நகரில், சர்­வ­தேச மொபைல் போன்
மாநாடு நடை­பெ­று­கி­றது. இதில், பேஸ்புக் நிறு­வனர் மார்க் ஸுக்­கர்பெர்க் பங்­கேற்று, தன் நிறு­வ­னத்­துடன் இணைந்து, அதி­வேக தகவல் பரி­வர்த்­த­னைக்­கான மொபைல் ­போன்­களை உரு­வாக்க, தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு வேண்­டுகோள் விடுப்பார் என, பேஸ்புக் தரப்பு தெரி­வித்­துள்­ளது. பேஸ்புக் நிறு­வனம், நேரடி வீடியோ படங்­களை மின்னல் வேகத்தில் அனுப்ப திட்­ட­மிட்­டுள்­ளது. அதற்­கேற்ற தொழில்­நுட்­பத்­துடன், மொபைல் போன்கள் தயா­ரிக்­கப்­பட்டால், தகவல் சேமிப்­புக்­கான ‘சர்வர்’ மற்றும் அது தொடர்­பான சாத­னங்­க­ளுக்கு செல­விடும் தொகையை, கணி­ச­மாக மிச்­சப்­ப­டுத்­தலாம் என, மார்க் ஸுக்­கர்பெர்க் எதிர்­பார்க்­கிறார். அதன் கார­ண­மா­கவே, அவர், மொபைல் போன் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயல்­பட விரும்­பு­கிறார்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...