01.06.2009 க்குப்பின்னர் பணிக்கு வந்த இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த உள்ள வழிகள்( வலிகள் ) என்ன ???

01.06.2009 க்குப்பின்னர் பணிக்கு வந்த இ.நி.ஆசிரியர்களுக்கு 1.86 வழங்க முடியாது பல சங்கங்களும் சில கயவர்களும் குழப்பி வருகின்றனர்.

*தாங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதால்  பிறரை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால்  இயக்கப் பொறுப்பாளர்கள் சிலர் வெளியேறி வருவதாலும் தங்களின் கூடாரம் காலியாவதால் , இயக்கப் பொறுப்பாளர்களை தக்க வைப்பதற்கு இந்த குழப்பத்தை ஏற்படுத்தி இ.நி.ஆசிரியர்களை ஏமாற்றுகின்றனர்.

*SSTA மத்திய அரசின் 6 வது ஊதியக்குழு அறிக்கை, மாநில அரசின் 6 வது ஊதியக்குழு அறிக்கை ,ஒருநபர், மற்றும் மூன்றுநபர் அறிக்கைகளை
அனைத்தையும் ஆராய்ந்து  தமிழகத்தில் இதுவரை எந்த இயக்கங்களும் அறிந்திராத பல்வேறு உண்மைகளை தொகுத்து வைத்துள்ளது  SSTA.

*முதலில் இவர்கள் கூறுவது போலவே அரசின் உயர் அதிகாரிகளும் கூறினர்.01.06.2009. க்கு பின்னர் 7717 நபர்களுக்கு அடிப்படை ஊதியத்தை 1.86 ஆல் பெருக்கி மாற்றி உள்ள ஆதாரத்தை ,அரசாணையை காட்டிய பின் எதுவும் உயர் அதிகாரிகளால் பேச முடியவில்லை...   3 நபர் ஊதியக்குழு 01.06.2009 க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு இரு வேறு ஊதியம் வழங்க கூடாது என கூறி 01.06.2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு  உயர் ஊதியம் வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளதை இதுவரை எந்த இயக்கத்திற்கும் தெரியாது .SSTA இவற்றை எல்லாம் ஆதாரத்துடன் காட்டியதால் தான் அரசு பணிந்தது.....        
*ஆதனால் தான் நிதித்துறைசெயலர் தவறு நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதோடு ,வாய்ப்பு ஏற்படும் போது செய்து தருகின்றேன் என்று பல முறை கூறியுள்ளார் ,ஆனால் காலதாமதம் ஏற்ப்பட்டதினால்   SSTA நீதிமன்றத்திலும் வழக்கு  தாக்கல் செய்து சட்டபூர்வமான போராட்டத்திலும்,  *இதுவரை தொடக்கக்கல்வித்துறை வரலாற்றிலேயே எவரும் செய்ய முடியாத களப்போராட்டத்திலும் தீவிரமாக இறங்கியது.. (1.86 ஊதிய வழக்கிலும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. )

*1.86 கிடைக்காது என்று சொன்னால் ஏன் இறுதி கட்டம் வரை இந்த ஊதிய வழக்கு நிற்கிறது. முதலிலே தள்ளுபடியாகிருக்கும்....!

*SSTA அதிரடியாக களப் போராட்டத்ததில் இறங்கியதோடு மட்டுமல்லாமல்  யாரும் தெரிவிக்காத உண்மைகளை நிருபித்ததால் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எழுத்து பூர்வமான. உறுதிமொழியும் அரசு வழங்கியுள்ளனர்.                                              
*பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்கும் என்பதற்கு ஏற்ப ...அவர்கள் அறியவில்லை எனில் ஏதுவுமே இல்லை என்றாகிவிடாது... அனைத்து ஆதாரமான தகவல்களையும் இப்போதே பதிவிட முடியும்,பதிவிட்டால் திருட்டு கும்பல் ஊரை விட்டு ஓடிவிடுமா ??? அல்லது அதையும் நான்தான் செய்தேன் என்று நான்கு ஏமாளிகளை வைத்துக்கொண்டு பெருமை கொள்ளுமா ???                                      வழக்கு முடிவடையட்டும் சரியான நேரத்தில்  SSTA அனைத்து ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்யும்.
                                                                                  *  ஆசிரியர்களுக்காக இதுவரை எதையும் செய்யாமல் ,அடுத்தவர் பெற்ற பிள்ளையை என் பிள்ளை( அடுத்தவரின் சாதனைகளை நானும் செய்தேன்.     எ.கா- மாவட்ட மாறுதல் ,CPS) என்று ஏமாற்றி வருபவர்களை ஒருநாள் ஆசிரியர்கள் துரத்தும் அடிக்கும் காலம் வரும் அந்த  நாள் வெகுதொலைவில் இல்லை...!!!
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...