இன்று (09.03.2016) சூரிய கிரகணம்:
சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும்.முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று காட்சி அளிக்கும். இந்நிலையில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூரிய கிரகணம் இன்று காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி இன்று காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.
இதேபோல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.