தலைவர்களை விமர்சித்தால் 1 மாதம் சிறை என கூறியதாக வெளியான தகவல் தவறு !

லக்கானி விளக்கம்
------
சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களை விமர்சித்தால் 1 மாதம் சிறை என கூறியதாக வெளியான தகவல் தவறு என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். பொது வாழ்வுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்க்குமாறு அரசியல்
கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதுதான் சரியான தகவல். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டால் என்ன நடவடிக்கை என்ற வேறொரு கேள்விக்கு அளித்த பதிலில், Sec 188 IPC படி நடவடிக்கை எடுக்க வழி இருப்பதாக லக்கானி கூறியுள்ளார். இதுதொடர்பாக, சம்பந்தமில்லாத வகையில் வெளியான செய்திகளால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதுபோல எந்த அறிக்கையும் தரப்படவில்லை என்று தேர்தல் அதிகாரி விளக்கியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...