ரூ.10 லட்சம் மேல் வருவாய் 7 லட்சம் பேருக்கு மானியம் ரத்து?

தமிழகத்தில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும், ஏழு லட்சம் பேருக்கு, சமையல் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.62 கோடி சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். காஸ் சிலிண்டர் வினியோகத்தில்
முறைகேட்டை தடுக்க, மத்திய அரசு, 2015 ஜன., மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், மானியத்தை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கின்றன.
மத்திய அரசு, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமானம் பெறுவோருக்கு, காஸ் மானியத்தை ரத்து செய்யப் போவதாக, 2015 இறுதியில் அறிவித்தது. ஆனால், அந்த விவரத்தை கண்டறிவதில், எண்ணெய் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், ஏழு லட்சம் பேர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 30 லட்சம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். அதில், ஏழு லட்சம் பேர், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகின்றனர் என, மத்திய அரசின், சில துறைகளிடம் இருந்து, தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரம், அதிகாரப்பூர்வமாக கிடைக்காததால், மானியம் ரத்து செய்வது தாமதம் ஆகும். எனினும், இவர்களுக்கு மானியம் ரத்தாவது உறுதி.
தற்போது, புதிய காஸ் இணைப்பு கேட்டு வருவோரிடம் முகவரி, அடையாள சான்று கேட்பதுடன், கூடுதலாக வருமானம் விவரமும் கேட்டு பெறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...