இயற்கை பேரிடர் காலங்களில் சாலை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் அதிநவீன செயற்கைக்கோள், மார்ச், 10 மாலை, 4:30 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான, 54:30 மணி நேர, 'கவுன்டவுண்' நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது.
இயற்கை பேரிடர் காலங்களில் சாலை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் திட்டத்தின் கீழ், ஏழு செயற்கைக்கோள்களை செலுத்த, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'
திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, ஐந்து செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு விட்டன. இந்த வரிசையில், ஆறாவது செயற்கைக்கோள், ராக்கெட் மூலம், மார்ச், 10 மாலை, 4:30 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான, 54:30 மணி நேர, 'கவுன்டவுண்' நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது.
இந்த செயற்கைக்கோள், 1,425 கிலோ எடை உடையது. விண்ணில் ஏவப்பட்ட, 20வது நிமிடத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம், 12 ஆண்டுகள். இந்த செயற்கைகோள் மூலம், 1,500 கி.மீ., பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். சாலையில் செல்லும் வாகனங்களையும், வானில் செல்லும் விமானங்களையும் கண்காணிக்க முடியும்.