32,000 தலைமை ஆசிரியர்களுக்கு SSTA வின் அன்பான வேண்டுகோள் !!!

🍀🍀🌹SSTA🌹🍀🍀
     23000 ம் தொடக்கப்பள்ளி/ 9000 க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு SSTA-வின் அன்பான வேண்டுகோள்!!!

🌹அன்பான மூத்த சகோதர, சகோதரி தலைமை ஆசிரியர்களின் பார்வைக்கு இது எங்கள் கண்ணீரால் எழுதப்பட்ட கடிதம். கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு இதுவரை இ.நி.ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையபடவில்லை.

🌹தங்களின் முதையர்களின் உயிர் தியாகங்களினால் மற்றும் மூத்த ஆசிரியர்களின் & உங்களின்  உண்மையான போராட்டத்தின் விளைவாக  தற்போது நீங்கள் கணிசமான ஊதியம் பெறுகிறீர்கள்  எங்கள் ஆசிரியர் இனம் ஒரு பகுதியினர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பெருமிதம்
கொள்கிறோம். ஆனால் 2009 க்குப்பின் பணியில் சேர்ந்த இ.நி.ஆசிரியர்களின் நிலை தங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

🌹இன்று ஒவ்வொரு மாதமும்  நாங்கள் பெறும் ஊதியம் நீங்கள் அன்று 1988 ல்  பெற்ற தொகுப்பூதிய நிலையில் தான் உள்ளது.
நாங்கள் தற்போது  பெறும் ஊதியம் பத்து நாட்களுக்கு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.இதில் நாங்கள் பணிபுரியும் மாவட்டம் குறைந்தது 100 முதல் 400 கி.மீ தொலைவில் வெளி மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

🌹உடலாலும் மனதாலும் பண அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது 7 ஆண்டுகளாக மத்தியஅரசிற்கு இணையான ஊதியம் என்ற போராட்டத்திலும் கலந்து கொண்டோம். அதன் முடிவையும் நாங்கள் விளக்க தேவையில்லை.

🌹 தற்போது எங்களுடன் பணியாற்றும் சக இ.ஆசிரியர்களுக்கு இணையான ( மாநிலத்திற்கிணையான) ஊதியத்தைக் கூட  நாங்கள் வாங்கவில்லை.
ஒரே பணி, ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவி  இவை அனைத்தும் இருந்தும் மொத்த ஊதியத்தில் 9,000 ஆயிரம் இழப்பு ( மாநில அரசிற்கிணையான ஊதியத்தின் வித்தியாசம்).                            & எங்களைப்போல் நியிமிக்கப்பட்ட  பிற பிரிவினருக்கு (7717) நபர்களுக்கு ஊதியத்தை மாற்றி 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு வழங்கியுள்ளனர்.ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் அரசு வழங்க மறுக்கிறது ,இப்படி மாற்றப்பட்டுள்ளது என்பது எந்த இயக்கத்திற்கும் இதுவரை தெரியவில்லை....

🌹உங்கள் மனசாட்சிப் படி சொல்லுங்கள் எஉங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஒரே கோரிக்கைக்காக போராடும் உண்மைப் போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்று தடுப்பீர்களா?

அல்லது போராட்டத்திற்கு சென்றவர்களை ஏளனம் செய்து அனைத்து வகையிலும் துன்புறுத்துவீர்களா?

அல்லது இதே  நிலையில் நீங்கள் இருந்தால் நம் ஆசிரியர் சமூகம் அழிவதை  இதேபோல் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?

எங்களது குறைந்தபட்ச நியாயமான கோரிக்கையை (மாநில அரசிற்கிணையான ஊதியம்) பல முறை எங்களது இயக்கம் வலியுறுத்தியும் காது கொடுத்து யாரும்  கேட்க வில்லை.

🌹தயவு செய்து உங்களால் முடிந்தால் பெற்றுத் தாருங்கள் அல்லது நியாயமான கோரிக்கைக்காக உயிரையும் தர துணிந்த உண்மையான போராளிகளை வாழ்த்தி உங்கள் உதவி ஆசிரியர்களை வழியனுப்புங்கள்!!!
நம் ஆசிரியர் இனத்தை அழிவில் இருந்து மீட்டெடுப்போம்... நம் கண்முன்னே நம்இனம் அழிவதை எந்த மனசாட்சி உள்ள எந்த போராளியும் ஏற்கமாட்டார்கள்... ஆதரவை தாருங்கள் இழந்த ஊதியத்தை விரைவில்  மீட்டெடுப்போம்... இல்லையேல் எங்கள் உயிர் துறப்போம்....

உணர்வுக்காக குரல் கொடுப்போம்!!!
உரிமைக்காக உயிர் துறப்போம்!!!                                                                                                
என்றும் ஆசிரியர்களுக்காக...         🌹SSTA🌹
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...