பெயர் தான் வருவாய் துறையே தவிர, வருவாய்க்கும், இத்துறைக்கும் சம்பந்தமே இல்லை; உண்மையில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவைத் துறை தான் இது.
ஐந்து ஆண்டுகளில், வருவாய்த் துறையில் புதிய வட்டங்கள், கோட்டங்கள் உருவாக்குதல், மக்களைத் தேடிச் சென்று மனுக்கள் பெறும், அம்மா திட்டம், இலவச வீட்டுமனை திட்டம் என, பல நல்ல திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டுள்ளன; இதை பாராட்டலாம்.
ஆனால், இவற்றை எல்லாம் செயல்படுத்த, துறையில் போதிய கட்டமைப்பு வசதிகளை, அரசு செய்து தரவில்லை.
பணியிடங்கள் உள்ளன; அதில், 35 சதவீதம் ஆட்கள் இல்லை; அப்புறம் எப்படி, சேவைத்துறை சிறப்பாக செயல்பட முடியும்?
நிர்வாகம் சிறப்பாக செயல்பட, வருவாய் துறை சங்கங்கள் கொடுத்த ஆலோசனைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், உயர் அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை.
பேச்சு நடத்திய அதிகாரிகள், போராட்டம் அறிவித்தும் 'அதோ செய்து தருகிறாம்; இதோ செய்து தருகிறோம்...' என, கூறினர். நான்கரை ஆண்டுகளாகியும் செய்யவில்லை; இப்படி தொடர்ந்து ஏமாற்றியதன் விளைவு தான், அலுவலர்கள் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தும் நிலை ஏற்பட்டது.
வருவாய்த் துறையில் அரசியல் தலையீடு மிக அதிகம். குறிப்பாக, அம்மா திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களில், தகுதி இல்லாதவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
கடந்த ஆட்சியில் துவங்கிய அரசியல் தலையீடு, இந்த ஆட்சியிலும் தொடர்ந்தது. அதிகாரிகள் சுயமாக வேலை செய்ய முடியவில்லை. எதிலும்
வெளிப்படைத்தன்மை இல்லை. நியமனங்கள், பணி இடமாற்றங்களில் எல்லாம் பெரும் முறைகேடுகள் நடந்தன.
பணம் கொடுத்தால், தேவையான இடத்திற்கு பணி மாற்றம் பெற்றுச் செல்ல முடியும் அல்லது இருக்கும் இடத்திலேயே நீடிக்கலாம் என்ற நிலையே இருந்தது.
வெள்ள பாதிப்பின்போது, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சிறப்பாக நடந்தன. அரசின் வருவாய்த் துறை, சுகாதாரத் துறையினர் முழுமூச்சில் ஈடுபட்டனர்; அதை ஏற்றுக்கொள்கிறோம்.
வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியதும் வரவேற்கத்தக்கதே. பல மாவட்டங் களில் இருந்தும் வருவாய் அலுவலர்கள், வெள்ள பாதிப்பு மாவட்டங்களில் தங்கி, கணக்கெடுப்பை முடித்துக் கொடுத்தனர்.
முழுமையான பட்டியலை அரசிடம் ஒப்படைத்தும், இன்னும், நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் சென்று சேரவில்லை; மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு யார் காரணம்; போதிய நிதியை விடுவித்து, நடைமுறைகளை தெளிவுபடுத்தி இருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.
அரசின் உதவி பெறுவதற்கான சான்றிதழ்கள், வீட்டுமனை பட்டா விண்ணப்பித்தால், அலைய விடாமல், குறித்த நாட்களில் கிடைக்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். ஆனால், நிர்வாக குளறுபடிகளால், குறித்த நாட்களில் வழங்க முடியவில்லை.
பட்டா வழங்குவதில், நிலத்தின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், கலெக்டரால் பட்டா வழங்க முடியாது; நில நிர்வாக ஆணையர் வரை செல்ல வேண்டி உள்ளது.
இதை, 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தி இருந்தால், பட்டா வழங்குவதை எளிமைப்படுத்தி இருக்கலாம். 'ஆன்-லைன்' முறையில் தான் சான்றுகள் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதில், வி.ஏ.ஓ.,க்களுக்கு மட்டும், 'லேப்-டாப்' தரப்பட்டுள்ளது. ஆனால், 'நெட்' இணைப்புக்கு பணம் தருவதில்லை.
வருவாய் ஆய்வாளர், மண்டல தாசில்தார்கள் வரை, 'லேப்-டாப்' தரப்பட்டிருந்தால், 'ஆன்-லைன்' வழி சான்று வழங்குவது எளிதாகி இருக்கும். இவற்றை எல்லாம் செய்ய, இந்த அரசு தவறிவிட்டது.
அடுத்து அமையும் அரசாவது, அரசின் திட்டங்களை மக்களிடம் தடையின்றி நேரடியாக கிடைக்க செய்ய வேண்டும்; அதற்கு நிர்வாகம் சிறப்பாக செயல்பட தேவையான வசதிகள் செய்து கொடுப்பதோடு, வழிமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.டி.சிவஜோதிபொதுச்செயலர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்