அரசுப்பள்ளியும் மாணவர் சேர்க்கையும்
அரசுப் பள்ளிகளைப் பெரும்பாண்மையான பெற்றோர்கள் புறக்கனிக்கும் காரணங்களைப் பல்வேறுபட்ட தவிர்க்க இயலா தளங்களிலிருந்து நிதானித்துத் தெளிய வேண்டியே இப்பதிவு.
கல்விச் சூழல்:
~~~~~~~~~~~
அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கு முன்னான முன்பருவ வகுப்புகள் இல்லை. தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பின் முதல் நாளில் அனைத்து எழுத்துகளும் தெரிந்த குழந்தை அடியெடுத்து வைக்கிறது. அரசுப்
பள்ளியில் 1-ம் வகுப்பில் தான் எழுத்துகளே அறிமுகம் செய்யப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பர். அரசுப் பள்ளியில் குறைந்தது 3 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரு ஆசிரியர் இருப்பர்.
செயல் வழிக் கற்றல் முறையால் 1&2 / 3&4 என்று பிரிக்க வேண்டியுள்ளதால் 1,2,3&4 வகுப்புகளையும் ஒரே ஆசிரியரே கவனிக்க வேண்டிய நிலை.
இதன்படி, தனியார் பள்ளியில் ஆரம்ப நிலையில் ஒரு ஆசிரியர் 1 வகுப்பிற்கான 5 பாடங்களை (TEMSSS) மட்டும் பயிற்றுவிப்பார். அதே கால இடைவெளியில் அரசுப் பள்ளி ஆசிரியர் 3 வகுப்புகளுக்கும் சேர்த்து குறைந்தது 13 பாடங்களை (Subject) கற்பித்தே ஆகவேண்டும்.
தனியார் பள்ளியில் ஆசிரியருக்குக் கற்பித்தல் மட்டுமே முழுமுதற்பணி. ஆனால் அரசுப் பள்ளிகளிலோ 15-ற்கும் மேற்பட்ட தனித்தனியான நலத்திட்ட உதவிகளை வழங்கல், ஆதார், மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், தலைமையாசிரியர் கூட்டம், அரசு அவ்வப்போது கோரும் அறிக்கைகளை அனுப்புவது என சுழற்சி முறையில் வரும் பணிகளுக்கிடையே தான் கற்பித்தல் பணியைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம்.
அப்படியானால் தற்போது அரசுப் பள்ளியில் பயிலும் மாணவன் மட்டும் பாவமில்லையா எனலாம். இந்நிலையை மாற்றிடவே உரிமைப் போராளிகளான ஆசிரிய இயக்கங்கள் தொடர்ந்து போராடியும், சமீபத்தில் வழக்காடியும் வருகின்றன.
ஆசிரியன் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் எந்தவொரு பொதுமக்களும் இச்சீர்கேடுகளை நீக்க தன் விரலைக் கூட அசைத்தது இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.
ஆங்கில இச்சை:
~~~~~~~~~~~~~
அம்மா, அப்பா என அழைப்பதைத் தரக்குறைவாகவும் மம்மி, டாடி என்பதையும் சித்தப்பனையும் மாமனையும் பிரித்தறியாது அங்கிள் என அழைப்பதையும் தலைக்கான மகுடமாக நினைக்கும் மதியீனமும் அரசுப் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான தடைகளில் ஒன்று.
இத்தடையைக் உடைக்கிறேன் என ஒப்பிடமுடியா அறிவாண்மையோடு அரசுப் பள்ளியில் ஆங்கிலத்தைத் திணித்துள்ளது அரசு. ஆங்கிலப் பயிற்றுமுறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதுமின்றி புலியைப் பார்த்து சூடுபோட்ட பூனைபோல அரசுப் பள்ளிக்குள் ஆங்கிலத்தைப் புகுத்தியுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை 1% கூடியது எனினும் இது ஏற்புடைய / பயனுள்ள திட்டமேயல்ல.
இதனை உணர்ந்த பல தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியை மிண்டும் தமிழ்வழிப் பயிற்று முறைக்கே மாற்றிவிட்டனர்.
மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளில் (CBSE) ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளைப் பயிற்றுவிப்பதற்கும் ஆங்கில பதின்மப் பள்ளிகளில் (Metric) பயிற்றுவிப்பதற்குமே மலையளவு வேறுபாடுகள் உண்டு.
CBSE-ன் 6-ம் வகுப்பு மாணவனுடன் ஆங்கிலத்தில் சரிநிகராகக் கலந்துரையாடும் திறன் Metric பள்ளியின் +2 மாணவனுக்கு இருக்காது. ஏனெனில் Pre-KG முதல் CBSE-ன் பயிற்றுவிப்பு முறை, பாடத்திட்டமுறை வேறு நிலையானது. இன்னும் சொல்ல வேண்டுமானால் CBSE-ன் 2-ம் வகுப்பு குழந்தை தனக்கான வீட்டுப்பாடங்களை பெற்றோரின் மேற்பார்வையில் தானே செய்து கொள்கிறது. இங்கும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் படித்தவராக இருத்தல், திறன் தேர்வுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆங்கிலப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் கற்றல் திறன் பள்ளியின் பற்றுவிப்போடு பெற்றோரின் கற்றல் அறிவை / கற்றல் சூழலை அமைத்துத் தருதலைப் பொருத்தே அமைகிறது.
மொத்தத்தில்,
★சமூகத் தராதரம்
★மதிப்பெண் கல்வி (Ma
★கற்பித்தல் சூழல் (Teaching Situation)
★ஆங்கில இச்சை (English Lust)
உள்ளிட்ட இதற்கும் மேலான காரணங்கள் இருந்தாலும் இவற்றைத் தவிர்த்து இருக்க வாய்ப்பேயில்லை.
இவற்றைக் களைய என்ன செய்தாய் என ஆசிரியனை மட்டும் கேளாமல், பெற்றோர்கள் தங்களைச் சீர்படுத்திக் கொண்டு, பள்ளிக் கல்விக்காக அரசையும் கேள்வி கேட்கும் காலம் கனிந்தால் தான் இலவசக் கல்வி தரும் நமது அரசுப் பள்ளிகளைக் காக்க இயலும்.
இல்லையேல், அரசுப் பள்ளிகள் முற்றாய் அழியாவிடினும், முன்பருவக்கல்விக்கே மூன்று இலட்சம் கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் தாராளமாகப் பெருகிவிடும்.
இன்றைய தேவை
விசச்சாராயமோ,
விலையில்லா பொருட்களோ அல்ல!
100% இலவசக் கல்வியும்,
இலவச உயர் மருத்துவமும்,
இயற்கை விவசாயமுமே
இன்றைய இன்றியமையாத் தேவை!!