மதுரை காமராஜ் பல்கலையில் ஓராண்டுக்கும் மேலாக 'பி.எச்டி.,பட்ட ஆராய்ச்சிக்கான கைடுஷிப்' (வழிகாட்டி) அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர் பட்டியல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆராய்ச்சி பிரிவு முடங்கும் அபாயத்தில் உள்ளது.உயர்கல்விக்கு உயிர்நாடியாக இருப்பது ஆராய்ச்சி பிரிவு. ஆனால் இப்பல்கலையில் அப்பிரிவு முடங்கி கிடக்கிறது. துணைவேந்தராக இருந்த
கல்யாணி பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, பி.எச்டி., 'கைடுஷிப்' அனுமதி வழங்க வேண்டி 300க்கும் மேற்பட்ட தகுதியுள்ள பேராசிரியர்கள் விண்ணப்பித்தனர்.
ஆனால் அதற்குள் அவர் பதவி காலம், முடிவுற்றதால் ஓராண்டுக்கும் மேலாக அப்பட்டியல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது வரை 500க்கும் மேற்பட்டோர் 'கைடுஷிப்' வழங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். துணைவேந்தர் இல்லாதபட்சத்தில், அதற்கான அனுமதியை உயர்கல்வி செயலர் தலைமையிலான கன்வீனர் குழு வழங்க வேண்டும்.
ஆனால் இவ்விஷயத்தில் அவர் போதிய கவனம் செலுத்தாததால் அப்பட்டியல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்ய முயலும் 5,000க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.பல்கலை பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி பிரிவு முடங்கிவிட்டது என்றே சொல்லலாம். பல்கலையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பி.எச்டி., கைடுகள் பலர் ஓய்வு பெற்றனர். ஆனால் அந்த இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக யாரும் நியமிக்கப்படவில்லை.
கல்லுாரி, பல்கலை ஆசிரிய பணியிட நியமனங்களில் சேர 'நெட்' 'ஸ்லெட்' ஆகிய தகுதி தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதனால் பி.எச்டி., பட்டம் பெற பட்டமேற்படிப்பு படித்த பலரும் விரும்புகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பி.எச்டி.,க்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் 'பி.எச்டி., கைடு'களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆய்வுகள், ஆராய்ச்சிகள் முடங்கி கிடக்கின்றன.முந்தைய காலங்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளின் மூலம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இப்பல்கலை அர்ப்பணித்துள்ளது. இப்படி அளப்பரிய சாதனைகளை செய்த இப்பல்கலையின் ஆராய்ச்சிப்பிரிவு அவலநிலையில் உள்ளது வேதனைக்குரியது, என்றனர்.
விவாதிக்கப்படுமா: சென்னையில் நாளை (மார்ச் 23) இப்பல்கலை சிண்டிகேட் கூட்டம் செயலர் அபூர்வா தலைமையில் நடக்கிறது. இதில் கைடுஷிப் பிரச்னைகளும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பதிவாளர் மற்றும் கன்வீனர் கமிட்டி உறுப்பினர்கள் விளக்கம் அளித்து பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.