தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் கோவை, கோடிசியா அருகிலுள்ள மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டி, அறிவியல் வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றதன.
இதில் கோவை,ஈரோடு,பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும்
தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் சுமார் 800 மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்கள் மிக மிக நன்று, மிக நன்று, நன்று என மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.
இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் கோபிநாதன், ஆறாம் வகுப்பில் பயிலும் கார்த்திகேயன், சீனிவாசன் , சுபானு, ஏழாம் வகுப்பில் பயிலும் கீர்த்தனா, ஸ்ரீநி, எட்டாம் வகுப்பில் பயிலும் அருண்குமார், நவீன்,திவ்யதர்ஷினி.காவ்யா,தமிழ்ச்செல்வி ஆகியோர் நன்று பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.
புகைப்படக் குறிப்பு
பரிசு பெற்ற மாணவர்களுடன் DR.ஐயம்பெருமாள் (இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்,சென்னை),சுப்ரமணியம் (டெபுடி ஜெனரல் மேனேஜர்,கனரா வங்கி, சென்னை) மற்றும் பள்ளியின் கணித ஆசிரியர் திருமுருகன்.