ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு மாநாடு, திருச்சியில் நடந்தது.
'புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, முற்றிலும் கட்டணமில்லா முறையில், சிகிச்சை பெறும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும்' என்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
மாநாட்டில், முன்னாள் அரசு ஊழியர்கள் பேசியதாவது: ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் எதையும், இந்த அரசு நிறைவேற்றவில்லை. அமைச்சர்கள் ஆலோசனை கூறுபவர்களாக இல்லாமல், முதல்வர் கூறுவதை மட்டும் செயல்படுத்துபவர்களாக உள்ளனர். மொத்தத்தில், ஜனநாயக பண்புகளை சிதைக்கும் நிலை நிலவுகிறது.
கேலிக்கூத்தான ஆட்சி நிர்வாகத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது; அதற்காகத்தான் இந்த மாநாடு. இவ்வாறு அவர்கள் பேசினர்.
மாநில தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார்; துணைத் தலைவர் அருள்தாஸ் வரவேற்றார்.
காங்கிரஸ் பிரமுகர் வேலுச்சாமி, தி.மு.க., முன்னாள் எம்.பி., இளங்கோவன், மார்க்சிஸ்ட் பிரமுகர் அர்ஜுனன் உள்ளிட்ட பலர், கோரிக்கைகளை ஆதரித்து பேசினர்.