மாணவர்களுக்கு சத்துணவுடன், இரண்டு முட்டைகள் வழங்க அரசு கொடுத்தவை, அருப்புக்கோட்டையில், கோழிக்கறி கடைகளில் இலவசமாக அளிக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், ஒரு சில கோழிக்கறி கடைகளில் கறி
வாங்கினால், இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம், 1 கிலோ கோழிக்கறிக்கு, 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது.
நேற்று, 1 கிலோ கோழிக்கறிக்கு, இரண்டு முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இவை, அரசு சத்துணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அளிக்கப்பட்டவை. இது எப்படி கடைக்கு வந்தது என, கறி வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரித்ததில், வெளி மார்க்கெட்டில், 1 முட்டை, 4 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சத்துணவிற்கு வழங்கப்படும் முட்டைகளை சத்துணவு ஊழியர்களே, கடைக்காரர்களுக்கு, 1 முட்டை, 2.50 ரூபாய்க்கு விற்பது தெரிய வந்தது.
குழந்தைகளுக்கு முட்டை போடக் கொடுத்தா, அதை ஆட்டையைப் போடுறது நியாயமா என, கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.