விடுப்பு போராட்டம்: சிறைத்துறையினர் முடிவு !

மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, ஒட்டு மொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட, சிறைத்துறை போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள்; 143 கிளை சிறைகள்; ஐந்து மாவட்ட சிறைகள்; மூன்று
பெண்கள் சிறைகள் மற்றும் ஆறு திறந்தவெளி சிறைகள் உள்ளன. இதில், 3,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
சிறைத்துறையில், தலைமை சிறைத்துறை காவலர், துணை சிறை அலுவலர் பதவி உயர்வுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்வு மட்டும் நடத்தி விட்டு, பதவி உயர்வு அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள சிறைத்துறையினர் கூறியதாவது:கடந்த, 1998ல், பணியில் சேர்ந்தவர்கள் பலரும், அடுத்த மாதம் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அது ஓய்வு பெற்ற பின் பெரும் உதவியாக இருக்கும். இதற்கான தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. முடிவுகள் அறிவிப்பது வழக்கம் போல கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டதால் தேர்ச்சி பெற்றவர் பட்டியல் மார்ச், 3ல் இறுதி செய்யப்பட்டது. ஆனால், அதை வெளியிட சிறைத்துறை மறுக்கிறது; அதற்கான காரணம் தெரியவில்லை. எனவே, எங்கள் கோரிக்கை நிறைவேற்றுவதற்காக விரைவில் எங்கள் நிலையில் உள்ள, 2,000 போலீசார் ஒட்டு மொத்த விடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் பிறகாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...