தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை நீட்டிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் கோரிக்கை
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க தேர்தல் ஆணையத்திடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணி தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ம் தேதியுடன் இப்பணி முடிவடையும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆதார் அட்டை வழங்கும் பணி முடிவடையவில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. இப்பணியை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ள இயக்ககம், அதற்கான அனுமதியை கடிதம் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 84 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 52 லட்சத்து 8 ஆயிரத்து 497 பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.