ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு !

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கின்றனர்.
அந்த 10 லட்சம் குழந்தைகளில் குறைப் பிரசவம், எடைக் குறைவு, நோய்த் தொற்று, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் 57 சதவீதக் குழந்தைகள் பிறந்த 28 நாள்களுக்குள் உயிரிழக்கின்றனர்.


மேலும், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் 20 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட 7 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று நட்டா குறிப்பிட்டுள்ளார்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...