ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு !

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை
படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர, ஜூன், 12ல், 'டான்செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு எழுத விரும்புவோர், மே, 5 முதல் மே, 17 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 500 ரூபாய்; தலித், அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 250 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...