பெரும்பாலான மாநிலங்களில் வெயில் கொடுமைக்கு இதுவரை 135 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டும் 60 பேர் உயிர் காவு வாங்கியிருக்கிறது . டில்லியில் வரலாறு காணாத வெப்பம் இன்று நிலவியது
இந்த ஆண்டில் வெயில் கொடுமை அதிகரிக்கும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்த வெயில் கொடுமை தாங்க முடியாத அளவிற்கு வெயில் " சுள் " என சுட்டெரிக்க துவங்கியிருக்கிறது. டில்லியில் இன்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. இது இன்னும் 44 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்றே டில்லி மக்கள் கடும் வெப்பத்தை உணர்ந்தனர். இந்த ஆண்டில் அதிக வெப்பம் நிலவிய நாள் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரியா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் வெயில் கொளுத்துகிறது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகப்பட்சமாக 60 பேரை பலி வாங்கியா தெலுங்கானாவில் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஒடிசாவில் கட்டாக், குர்தா,பாலசோர் பகுதிகளில் உச்சக்ககட்ட வெயில் அடிக்கிறது. இங்கு இது வரை 30 பேர் பலியாகியிருக்கின்றனர். நாடு முழுவதும் இன்னும் வெயில் கொடுமை அதிகரிக்கும் என தெரிகிறது. மகாராஷ்ட்டிராவில் தண்ணீர் பஞ்சத்தால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களைகட்டியது குளிர்பான விற்பனை: வெளியே திரிய வேண்டிய நிலையில் உள்ள மக்கள் உஷ்., கொட்டுகின்றனர். தங்களின் தாகம் தீர்ப்பதற்கு குளிர்பான கடைகளை நோக்கி விரைகின்றனர். இளநீர், நன்னாரி சர்பத், கரும்பு ஜூஸ் விற்பனை களை கட்டியுள்ளது.