சென்னை வெள்ளத்தால் 14,520 கோடி ரூபாய் இழப்பு:சர்வதேச காப்பீடு நிறுவன ஆய்வில் தகவல் !

சென்னையில், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தால், 14 ஆயிரத்து, 520 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அதில், காப்பீடு செய்யப்பட்ட உடைமைகளின் மதிப்பு, 1,200 கோடி ரூபாய்' என, சர்வதேச காப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.


சென்னையில், 2015 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், கொட்டி தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த, 'ஸ்விஸ் ரே பொருளாதார ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம்' அவ்வப்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்ட உடைமைகளுக்கு ஏற்படும் சேதம் பற்றிய மதிப்பீடுகளை வெளியிடுவது வழக்கம்.

அந்நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விபரம்:இந்தியாவில், 2015ல், இயற்கை மற்றும் மனித செயல்களால் ஏற்பட்ட பேரிடர்களால், 40 ஆயிரத்து, 920 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் ஏற்பட்ட இழப்புகளில் இது, 6.4 சதவீதம். இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகளில், 84 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்டவை.

கடந்த, 2014ல், இயற்கை பேரிடரால், 88 ஆயிரத்து, 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதில், காப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, 84 சதவீதம்; 2015ல், இது சற்று குறைந்தது.
கடந்த, 2015ல், இந்தியாவில் ஏற்பட்ட, 20 பேரிடர்களில், ஆண்டு இறுதியில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 1.37 லட்சம் ஏக்கர் பரப்பிலான பகுதிகளில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டது; 289 பேர் உயிரிழந்தனர்; பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

சென்னை வெள்ளத்தால், 14 ஆயிரத்து, 520 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதில், காப்பீடு செய்யப்பட்ட உடைமைகளின் பாதிப்பு மட்டும், 1,200 கோடி ரூபாயை தாண்டும். இது, 2015ல், இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது, மிகப் பெரிய காப்பீடு இழப்பு.
சென்னையில் உள்ள ஏராளமான உற்பத்தி நிறுவனங்களில் வெள்ளத்தால் தொழில் பாதிக்கப்பட்டதும், அதிக பொருளாதார இழப்பீடு ஏற்பட காரணம். திடீர் வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் நிலையில், இந்திய நகரங்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...