மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு? முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தொடங்கியது.முக்கியப் படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இன்று, இயற்பியல், பொருளாதாரம் பாடத்துடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைக்கின்றது.மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் சற்று கடுமையாக இருந்ததாக மாணவர்களிடையே பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...