தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா திட்டம், ஜன் தன் திட்டம் ஆகியவற்றை சிறப்பாகச் செயல்படுத்திய மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ஆம் தேதி விருது வழங்கவுள்ளார். இதுகுறித்து மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் கனவுத் திட்டங்களான ஜன் தன் திட்டம், பள்ளிகளில் தனித்தனி கழிப்பறைகள், ஊரகப் பகுதிகளில் தூய்மை, சுகாதாரத்தைப் பேணிக் காத்தல் (தூய்மை இந்தியா திட்டம்), மண் பரிசோதனைத் திட்டம் ஆகியவற்றை சிறப்பாக அமல்படுத்தி புதுமையைப் புகுத்திய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கெளரவிக்கப்பட உள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு குடிமைப் பணிகள் தினமான ஏப்ரல் 21-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்குவார். அரசின் முன்னுரிமை திட்டங்களை அமல்படுத்தியமைக்காக விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேற்கண்ட 4 திட்டங்களில் மொத்தம் 10 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பிரதமரின் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகள் மூன்று குழுக்களாக பிரித்து வழங்கப்படும். அதாவது முதல் குழுவில் 8 வடகிழக்கு மாநிலங்களும், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு- காஷ்மீர் ஆகியவையும், இரண்டாவது குழுவில் மீதமுள்ள 18 மாநிலங்களும், மூன்றாவது குழுவில் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளடங்கியிருக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.