வாக்காளர் துணை பட்டியல் ஏப்ரல் 22ல் வெளியீடு !

தமிழக வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 20ல் வெளியிடப்பட்டது. அதன்பின், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள்
பெறப்பட்டன.வாக்காளர் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஏற்பாடு
செய்யப்பட்டது. விண்ணப்பங்கள் பெறும் பணி, நேற்று இரவுடன் நிறைவு பெற்றது.
நேற்று வரை, 6.55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், பெயர் நீக்கக்கோரி, 1.79 லட்சம் விண்ணப்பங்கள்; பெயர் சேர்க்கக்கோரி, 1.55 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது தவிர, முகவரி மாற்ற, திருத்தம் செய்யக் கோரி, மீதி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவ்விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வரும், 22ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினம், தமிழகத்தில், மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் தெரியும்.
புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு, இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். முகவரி மாற்றம், திருத்தம் செய்தவர்கள், 25 ரூபாய் செலுத்தி, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...