தேர்தல் அலுவலர் - 2 க்கு பணிகள் அதிகம் ,அலுவலர்கள் எதிர்ப்பு !

அன்பான  ஆசிரிய  பெருந்தகைகளே !

தற்போது   எல்லோருக்கும்   தேர்தல்  பணி  ஆணை   வழங்கப்  பட்டிருக்கும் .


அலுவலர்  2  இக்கு   பணி   அதிகம்   ...

   1). 17  ஏ    புத்தகத்தில்   வாக்காளர்  பதிவு  வரிசை  பதிவு   செய்தல்

2)  . வாக்காளர்     எந்த  அடையாள  அட்டை  பயன் படுத்தி  வாக்கு
 அளிக்கிறார்  அதன்  சுருக்க  குறியீடு  மற்றும்  அந்த  அடையாள  அட்டை  எண்   17 ஏ    புத்தகத்தில்  பதிவு செய்தல்

3). வாக்காளரின்  கையொப்பம்   17  ஏ   இல்  வாங்குதல்

4) ரோஸ்  கலர்  சிலிப்பில்  வாக்காளர்   வரிசை எண்  எழுதுதல்  .அதன் கீழ்   உங்கள்  கையொப்பம்  இடுதல்  பின்  அந்த  சிலிப்பை  கிழித்து  கொடுத்தல்

5) இறுதியாக  வாக்காளரின்  இடதுகை  ஆள்  காட்டி  விரலை  கொடுக்கப்பட்ட  துணியால் துடைத்து   அழியா  மை  வைத்தல்


 நமக்கு  பயிற்சி  கொடுக்கும்  இடத்தில்   அலுவலர்   கூறுவது
polling  2 இக்கு  உங்கள்  பூத்தில்  presiding   அலுவலர்  உதவி  செய்வார்கள்  என  கூறி  சமாளித்து  விடு வார்கள் ... ஆனால்  பூத்தில்  சிரம படுவது  நாம்  மட்டுமே  என்பதை  இப்போதே  உணருங்கள் .


பல்லாயிரம்  கோடி  செலவு  செய்து  தேர்தல்  நடத்தும்   ஆணையம்   இதற்கு  முன்  மைவைபதற்கென்று  ஒரு  நபர்  நியமித்தது .
இப்போது  மட்டும்  அது  முடியாமல்  போவது  ஏன் ?

அப்படி  ஒன்றும்  இருக்காது  அவர்  உதவுவார்  இவர்  உதவுவர்  என்று  பிதற்றுபவர்கள் நமது  பூத்தில்  வந்து  நமக்கு  உதவ  முடியுமா ?
ஆணை  பெற்று  தர  முடியுமா ?

 சிந்திபீர் !  சிந்திபீர்!


ஏப்ரல்  24 இல்   ஒன்றுகூடி  குரல்  எழுபவாரீர் !! 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...