முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் 5 மாணவர்களின் மறுதகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-2018-ஆம் கல்வியாண்டுக்கு மாநில அரசு
ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் ஏப்ரல் 4 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. 854 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் முடிவில் 751 இடங்கள் நிரம்பின. 103 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு மே இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கலந்தாய்வில் முதுநிலை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பங்கேற்கும் 4 பேர், முதுநிலை பல் மருத்துவக் கலந்தாய்விவ் பங்கேற்கும் 1 மாணவர் ஆகியோருக்கு மறு தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே பயின்ற கல்லூரியில் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்கள், நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவற்றின் காரணமாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு அவர்களுக்கு மறுதகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் பொது ரேங்க்கில் எந்வித மாறுதலும் இல்லை.

இதில் 2 மாணவர்கள் ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றுவிட்டனர். மாணவர்கள் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.