பி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு !

.இ. படிப்பில் சேர செவ்வாய்க்கிழமை வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
 2016-17-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் கடைசி வாரம் முதல் நடத்த உள்ளது.


 இந்த முறை மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகத்தை ரத்து செய்யப்பட்டு, முதல்முறையாக இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கியது.
 முதல் நாளான ஏப்ரல் 15-ஆம் தேதி இணையதளம் முடங்கியதால், அன்று 5,424 பேர் மட்டுமே பதிவு செய்தனர்.
 அடுத்த நாளான ஏப்ரல் 16-இல் 23,186 பேரும், 17-ஆம் தேதி 12,561 பேரும், 18-இல் 19,930 பேர், 19-ஆம் தேதி 11,621 பேர் என 5 நாள்களில் மொத்தம் 72,722 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...