இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம். மே மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று தெரிந்துவிடும். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே 2016 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் பல்வேறு புதிய பரிணாமங்களை சந்திக்கிறது.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலம் முதல் தமிழக அரசியல் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளை மட்டுமே முன்னிறுத்தி வந்துள்ள நிலையில், தற்போது பல முனைப் போட்டியை எதிர் கொள்கிறது.
தமிழகத்தை தற்போது ஆளும் அதிமுக, சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக பிரதான கட்சியான அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அடுத்த பிரதான கட்சி திராவிட முன்னேற்ற கழகம். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறாத திமுக தற்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தேமுதிக வரவை கடைசி வரை எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தது. கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தற்போது 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு மாற்றாக களத்தில் இறங்கும் மூன்றாவது அணி எப்போதும் மூன்றாவதாகவே வரும். ஆனால், திமுக-அதிமுகவை விரும்பாத கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. பின்னர் இந்த கூட்டணியினர், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் இணைந்து, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். இக்கூட்டணியில் கடைசியில் இணைந்து கொண்டார் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து ஜி.கே.வாசன். இந்த கூட்டணியும் தற்போது மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுதவிர பட்டாளி மக்கள் கட்சி, அதன் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இவர்களைத் தவிர மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரதீய ஜனதா கட்சி சில சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு வேட்டையாடி வருகிறார்.
அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 21 வேட்பாளர்களை மாற்றியுள்ளது. இதேபோல பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் சில வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. அதே நேரத்தில் மூன்றாவது அணியின் சார்பில் அதன் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
எதிர்க்கட்சிகளான திமுகவும், பட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகியன தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, தமிழக தேர்தல் களத்தில் ஏதாவது ஒரு பிரச்னை முன்னிறுத்தப்படும். 1991- ராஜீவ் படுகொலை, 1996- அதிமுகவுக்கு எதிரான ஊழல், 2011- திமுகவின் குடும்ப ஆட்சி.
ஆனால், தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் எவ்வித பிரச்னையும் பிரதானமாக முன்னிறுத்தப்படவில்லை. அதேநேரத்தில், இதுவரை இல்லாத வகையில் பல முனைப் போட்டியும் நிலவுகிறது.
தேர்தல் பிரசார யுக்திகளும் மாறிவிட்டன. புதிய தலைமுறை வாக்காளர்களை குறி வைத்து சமூக வலைத்தளங்களில் பிராசரம் அதிக அளவில் நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் வாக்குப் பதிவு மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மே மாதம் 19 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலே நம்மை ஆளப்போகிறார்கள் யார் என்று தெரிந்துவிடும். இன்றிலிருந்து சரியாக ஒருமாதம். பொறுத்திருப்போம்...