ஆப்பிள்' மொபைல் போனில் தேர்தல் புகார் அளிக்கும் வசதி !

நாட்டிலேயே முதன் முறையாக, தேர்தல் புகார் அளிக்க, 'ஆப்பிள்' மொபைல் போன் இயங்குதளம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில், நேற்று சென்னையில், சட்ட சபை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க, அரசு மற்றும் ஊடகங்கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.
ஆய்வுக் கூட்டம் துவங்குவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்குடன், தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி விளக்கப்படம்; தேர்தல் புகார் அளிப்பதற்கு வசதியாக, இந்தியாவிலேயே முதன் முறையாக, 'ஆப்பிள்' மொபைல் போன் இயங்குதளம் மூலம் செய்யப்பட்டுள்ள, சிறப்பு ஏற்பாடு; டி ஷர்ட், தொப்பி போன்ற வணிகப் பொருட்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை, நசீம் ஜைதி துவக்கி வைத்தார்.'ஆன்ட்ராய்டு' இயங்குதளத்தில், ஏற்கனவே தேர்தல் புகார் கொடுக்க வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக் கூட்டத்தில், தேர்தல் கமிஷனர்கள் ஓம்பிரகாஷ் ராவத், துணை தேர்தல் கமிஷனர்கள் உமேஷ் சின்கா, சந்தீப் சக்சேனா
பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...