தமிழகத்தில், சமீபகாலமாக, பெண் குழந்தைகள் தற்கொலை அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இதுபற்றி, 'எவிடன்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்தார், அண்மையில் தற்கொலை செய்து கொண்ட, 105 குழந்தைகள் பற்றி ஆய்வு
செய்துள்ளனர்.அவர்களில், 58 சதவீத பேர் பெண் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற குழந்தைகள், 87 சதவீதம் பேரும், நகர்ப்புற குழந்தைகள், 13 சதவீதம் பேர் தற்கொலை செய்து
உள்ளனர்.
அதில், 12 வயதிற்கு உட்பட்டோர், ஒன்பது பேர்; 13 - 15 வயதினர், 48 பேர்;, 15 வயதுக்கும் மேல், 48 பேர் தற்கொலை செய்துள்ளனர். பெற்றோர், 'டார்ச்சர்' மற்றும் தாய், தந்தையிடையே புரிதல் இல்லாத போக்கை தற்கொலைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
தவிர, சரியாக படிக்க முடியவில்லை, மதிப்பெண் குறைந்துவிடுமோ என்கிற பயம், 'ஈவ் - டீசிங்', பாலியல் வன்புணர்ச்சியால் நேர்ந்த அவமானம், ஆசிரியர் மீதுள்ள பயம் போன்ற காரணங்களால், 83 குழந்தைகள் உயிர் துறந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பற்றி காரணம்
தெரியவில்லை.தங்களை எவரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை; சித்ரவதை செய்யப்படுகிறோம்; தங்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்க ஆள் இல்லை; நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் என்பது உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான குழந்தைகள் தற்கொலை செய்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுக்க என்ன வழி:அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மனநல ஆசிரியரை அரசு நியமிக்க வேண்டும்
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வதை, குற்ற வழக்காக மட்டும் கவனத்தில் கொள்ளாமல், அக்குழந்தைகளின், பல்வேறு சமூக, பொருளாதார காரணங்களை அறிய, சிறப்பு ஆய்வு அறிஞர்கள் நியமனம் செய்ய வேண்டும்
மன அழுத்தம் ஒழித்தல், பிரச்னைகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுத்தல், பயத்தை போக்குதல் உள்ளிட்ட மனத்திறன் பயிற்சி அளிக்க வேண்டும்
குழந்தைகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிவது, பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பயிற்சிகளை, பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொடர் பயிற்சி அளிப்பது அவசியம்
குழந்தைகள் நடத்தையில், படிப்பில் திறன் குறைபாடு இருந்தால் மனநல ஆலோசகரின் அறிவுரைப்படி பெற்றோர் நடந்து கொள்ளுதல் நல்லதுஎவராயினும், குழந்தைகளை மரியாதையுடன் நடத்த வேண்டும்.