கார், வேனுக்கு சுங்க கட்டணம் உயரவில்லை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் !

பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு கட்டண உயர்வு இல்லை' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள, சுங்கச் சாவடி கட்டண உயர்வு தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
வெளியிட்டுள்ள விளக்கம்:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாடு செய்யப்பட்டு, பராமரிக்கப்படும் கட்டண சாலைகளின் சுங்கச் சாவடிகளில், நேற்று முதல் திருத்தம் செய்யப்பட்ட கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
'தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி - 2008'ன் கீழ், கட்டண திருத்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 1 முதல் கட்டணம் திருத்தி அமைக்கப்படும். நடப்பு ஆண்டு மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, தற்போது திருத்தப்பட்ட கட்டண விகிதம் மிகக் குறைவே. கடந்த ஆண்டு கட்டணத்தை விட வெறும், 3 சதவீதம் தான் உயர்ந்துள்ளது.

ஐந்து ரூபாய்க்கு மேல் கட்டண உயர்வு இருந்தால் தான், அது வசூலிக்கப்படும். எனவே, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் கார், வேன் போன்ற இலகு ரக வாகனங்களுக்கான கட்டணங்களில் எந்த உயர்வும் இல்லை. தமிழகத்தில், 42 சுங்கச் சாவடிகளில், 20 சுங்கச் சாவடிகளில் மட்டுமே கட்டண திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.இவ்வாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...