அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், பள்ளி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விழிப்புணர்வு பணிகள், மே மாதம் முதல் வாரத்தில் துவங்கப்படுகிறது.
நகரின் மையப்பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு, மாணவர் சேர்க்கையில் எவ்வித பிரச்னையும்
இருக்காது. ஆனால், புறநகர் பகுதி, கிராமப்புற பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு, பள்ளிகளில் கட்டமைப்பு வசதி குறைபாடு, ஆசிரியர் காலிப்பணியிடம், தேர்ச்சி விகித சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பொதுவாக, துவக்கப்பள்ளிகள், ஆங்கில வழி கல்வி வகுப்புகளுக்கு, மாணவர்களை சேர்ப்பது சிரமமான காரியம். அங்கன்வாடிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை, துவக்க பள்ளிகளில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, தேர்ச்சி சதவீதம் குறித்து எடுத்துரைக்க திட்டமிட்டுளளோம். விழிப்புணர்வு பணிகள், மே மாதம் முதல் வாரத்தில் துவங்கப்படுகிறது, என்றனர்.