தேர்வு முடிந்து விட்டாச்சு ’லீவு’ !

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.

மாணவியர், சந்தோஷமாக தேர்வினை எழுதி முடித்த உற்சாகத்துடன் வந்து, சக மாணவியருக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 99 பள்ளிகள் உள்ளன; 8,539 பேர் பொதுத்
தேர்வினை எழுத விண்ணப்பித்தனர்.

இத்தேர்வு, 38 மையங்களில் நடந்தன. தனித்தேர்வர்களுக்கான தேர்வு கோமங்கலம்புதுார் அருகேயுள்ள வித்யா நேத்ரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 20 நாட்களுக்கும் மேலாக நடந்த தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வினை நேற்று 8,264 மாணவ, மாணவியர் எழுதினர்; 275 பேர் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்களில், 188 பேர் தேர்வெழுதினர். 20 பேர் தேர்வெழுதவில்லை.

உற்சாகம்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள், உற்சாகமாக வெளியே வந்தனர். சந்தோஷத்தை வெளிப்படுத்திய மாணவ, மாணவியர் சக மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒருவர் மேல் ஒருவர் இங்க் தெளித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தேர்வு எளிதாக இருந்ததாக கூறிய மாணவர்கள், சக மாணவர்களை சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு பிரிந்து சென்ற நிகழ்ச்சி நெகிழச் செய்தது.

விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ளதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி வரும் 16ம் தேதி முதல் நடக்கிறது. பொள்ளாச்சி பல்லடம் ரோடு டி.கோட்டாம்பட்டி எல்.எம்.எஸ்., பள்ளி விடைத்தாள் திருத்தும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு முதன்மை தேர்வர்கள் 49, கூர்ந்தாய்வர்கள் 49, உதவித்தேர்வர்கள், 490 பேரும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 16 மற்றும் 17ம் தேதியில், முதன்மைத்தேர்வர்கள், கூர்ந்தாய்வர்களும்; 18ம் தேதி முதல் உதவித்தேர்வர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...