மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்!

மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், இன்ஜி., படிப்புக்கு, முதல் முறையாக, ஆன்லைன் விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது. ஏப்., 15 முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.



ஆனால், அதற்கு முன் கலந்தாய்வு நடத்த வேண்டிய, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது, மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்ஜி., படிப்பை போன்றே, மருத்துவ படிப்புகளுக்கும் இந்த முறை, ஆன்லைன் விண்ணப்ப முறை அமல்படுத்தப்பட உள்ளது. இன்ஜி., ஆன்லைன் விண்ணப்ப பதிவிறக்கத்தில், ஆரம்ப நிலையில் குளறுபடி ஏற்பட்டதால், மருத்துவ படிப்பில் சிக்கல் வருமோ என, அஞ்சப்படுகிறது.

 இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமின்றி, வழக்கமான, காகித விண்ணப்ப நடைமுறையையும் அமல்படுத்த, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு விண்ணப்ப வினியோகம் குறித்த தகவல்களை, மருத்துவ கல்வி இயக்ககம், இன்று வெளியிடும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...