மூடப்பட்ட அரசு பள்ளிக் கட்டடங்கள், மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டுமா?

மூடப்பட்ட அரசு பள்ளிக் கட்டடங்கள், முழுமையாக சேதமடைவதற்குள் மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலுார் பழைய சந்தை வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஐம்பது மாணவர்களுடன் துவங்கிய
இப்பள்ளி, படிப்படியாக மாணவர் சேர்க்கை அதிகமாகி 15 ஆண்டுகளுக்கு முன் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். எண்ணிக்கை அதிகமானதால் வகுப்பறைகளை கூடுதலாக்க, இதனை ஒட்டியே இரண்டு இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.

அதன்பின் மெட்ரிக்., பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சென்றதால் , இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மாணவர்களே இருந்த நிலையில், இப்பள்ளி மூடப்பட்டது.



வீணான கட்டடங்கள்:அதன்பின் சீரமைப்பு பணிகள் எதுவும் செய்யாததால் கட்டடங்களும், மேற்கூரைகளும் சேதமடைந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் ஓட்டுச்சாவடியாக மட்டும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கட்டடத்தைத் தவிர மற்ற கட்டடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன.



பயன்பாட்டிற்கு வருமா :கூடலுாரில் வேளாண்துறைக்கு உரங்கள் மற்றும் மானியப் பொருட்கள் இருப்பு வைக்க இடம் தேவைப்படுகிறது. தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் கிடைக்காமல் பல மாதங்களாக அவதிப்படுகின்றனர். பல அங்கன்வாடி மையங்கள் மிகச் சிறிய இடத்தில் எவ்வித வசதியுமின்றியும் சேதமடைந்த கட்டடங்களிலும் இயங்கி வருகிறது. இது போன்ற ஏதாவது ஒரு துறைக்கு இப்பள்ளிக் கட்டடத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரலாம். பராமரிப்பின்றி கட்டடங்கள் முழுமையாக சேதமடைவதற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...