ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி !!!

ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து அந்த இல்லம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாய் தந்தையை இழந்து தவிக்கும் ஏழை மாணவர்கள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி படிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம்.
 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6-ஆம் வகுப்பிலும்(தமிழ் வழி), 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் முதலாண்டிலும் சேர்ந்து படிக்கலாம்.

 இலவசக் கல்வி பெற செயலர், ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், எண்.66, சர்.பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலும், 044- 24990264, 42107550 என்ற முகவரியிலும், office@rkmshome.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...