பி.எப்., முதலீட்டை தொடர்வதே சிறந்தது !

பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை அரசு விலக்கி கொண்­டி­ருந்­தாலும், தவிர்க்க இய­லாத அவ­ச­ரத்­ தே­வைக்கு மட்­டுமே பணத்தை எடுக்க வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை அரசு திரும்ப பெற்­றுள்­ளது, ஊழி­யர்­களை நிம்­மதி பெரு­மூச்சு விட வைத்­துள்­ளது. ஏற்­க­னவே
பட்ஜெட்டில் பி.எப்., நிதிக்கு, வரி விதிப்பு யோசனை முன்­வைக்­கப்­பட்டு தொழி­லா­ளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து அந்த முடிவு விலக்கிக் கொள்­ளப்­பட்­டது. இத­னி­டையே, பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பாக புதிய கட்­டுப்­பாடுகள் கொண்டு வரப்­பட்­டன. பிப்­ர­வரி மாதம் பி.எப்., அலு­வ­ல­கத்தால் வெளி­யிடப்­பட்ட அறி­விக்கை படி, ஊழி­யர்கள் முழுத்­தொ­கை­யையும் இடையே விலக்கி கொள்­வ­தற்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது.
புதிய கட்­டுப்­பாடு விதி­முறை படி, வேலையில் இருந்து வில­கிய ஊழி­யர்கள் தொடர்ந்து இரண்டு மாதத்­திற்கு மேல் புதிய வேலையில் சேராமல் இருந்­தாலும் கூட, தங்கள் பங்கு பி.எப்., நிதியை மட்­டுமே எடுக்கும் நிலை உண்­டா­னது. நிறு­வனம் சார்பில் செலுத்­தப்­படும் தொகையை, அவர்கள் ஓய்வு காலத்தில் மட்­டுமே எடுக்க முடியும்.
கடும் எதிர்ப்புபொது­வாக ஓய்வு காலத்­திற்­கான பாது­காப்­பாக கரு­தப்­ப­டு­வதால், பி.எப்., நிதியை குறிப்­பிட்ட முக்­கிய தேவை­க­ளுக்கு மட்டுமே இடையில் எடுக்க முடியும். எனினும், இடைப்­பட்ட காலத்தில் பணியில் இருந்து வில­கு­ப­வர்கள் புதிய தொழில் துவங்­கு­வது உள்­ளிட்ட பல காரணங்­க­ளுக்­காக பி.எப்., நிதியை எடுக்க முற்­ப­டலாம். இந்த தேவை­க­ளுக்­காக முழு நிதி­யையும் எடுக்க முடி­யாது எனும் கட்­டுப்­பாடு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. எனவே தான், ஊழி­யர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு போராட்­டமும் நடத்­தப்­பட்டது. இதை­ய­டுத்து, புதிய கட்­டுப்­பாடுகள் விலக்கி கொள்­ளப்­பட்­டுள்­ளன.
அவ­சர தேவைஇதனால், பி.எப்., நிதியை எடுப்­பதில் உள்ள தடை நீங்­கி­யுள்­ளது. பி.எப்., சந்­தா­தா­ரர்­க­ளுக்கு இது நல்ல செய்தி என்­றாலும், தவிர்க்க இய­லாத அவ­ச­ரத்­தே­வைக்கு மட்­டுமே பி.எப்., நிதியில் கைவைக்க வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.பி.எப்., என்­பது ஓய்­வு­கால நிதி என்­பதால், மருத்­துவ தேவை ஏற்­பட்டு, இந்த நிதி தவிர வேறு வழி­யில்லை எனும் சூழலில் மட்­டுமே பி.எப்., நிதியை எடுப்­பது சரி­யாக இருக்கும் என்­கின்­றனர்.
வீடு கட்­டுதல், கல்வி, திரு­மணம் உள்­ளிட்ட தேவை­க­ளுக்­காக பணம் எடுத்­துக் ­கொள்­ளலாம் என்­றாலும் கூட, இவற்றை அவ­சர தேவை­யாக கருத முடி­யாது என, நிதி ஆலோ­ச­கர்கள் கரு­து­கின்­றனர். வீடு வாங்­கு­வதை தள்­ளிப்­போ­டலாம் அல்­லது குறைந்த விலையில் வாங்க முற்­படலாம் என்று ஆலோ­சனை கூறு­கின்­றனர். மருத்துவ தேவை தவிர, மற்ற முக்­கிய தேவை­க­ளுக்கு கடன் வாங்­கு­வது உள்­ளிட்ட வேறு வழி­களை நாட முயற்­சிக்க வேண்டும் என்­கின்­றனர்.
கூட்டு வட்­டியின் பலன் இடைப்­பட்ட காலத்தில் பி.எப்., நிதியை முழு­வதும் எடுத்­துக்­கொள்ள தகுதி உடை­ய­வர்கள் கூட, தவிர்க்க இய­லாத கார­ணங்கள் இல்­லாத பட்­சத்தில் முத­லீட்டை தொடர்­வதே சரி­யாக இருக்கும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். பி.எப்., ஓய்வு கால பாது­காப்பு அளிக்கும் நிதி. மேலும், இது பென்ஷன் மற்றும் காப்­பீடு வச­தி­யையும் கொண்­டுள்­ளது. பி.எப்., முத­லீட்­டிற்கு, 8.8 சத­வீதம் வட்டி அளிக்­கப்­ப­டு­கி­றது. சேமிப்பு திட்­டங்­களை விட இது கூடுதல் பலன் அளிக்க கூடி­யது. பி.எப்., நிதி, அதிக வட்டி அளிப்­ப­தோடு, கூட்டு வட்டி அடிப்­ப­டையில் நீண்ட கால நோக்கில் மிகச்­சி­றந்த பலன் அளிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. இடைப்­பட்ட காலத்தில் விலக்கி கொண்டால் இந்த பலனை இழக்க நேரிடும்.
அதே­போல பி.எப்., முத­லீடு எல்லா நிலை­க­ளிலும் வரிச்­ச­லுகை அளிக்கக்கூடி­ய­தாக இருக்­கி­றது. தொடர்ந்து பணம் செலுத்­தப்­ப­டாமல் முடங்­கிய கணக்­காக இருக்கும் நிலை­யிலும் வட்டி அளிக்­கப்­படும் என, அண்­மையில் அறி­விக்­கப்­பட்டுள்­ளதால், தொடர்ந்து வட்டி வரு­மானம் கிடைக்கும் வாய்ப்பை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.எனவே, பி.எப்., நிதியை அதன் அடிப்படை தன்மை புரிந்து கொண்டு கையாள வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...