சிவில் சர்வீசஸ்' தேர்வு எழுதுவது... ரொம்ப ஈஸி! "தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அறிவுரை !

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவது மிகவும் எளிது; அதேநேரம், அலுவலகம் சென்றோம்; எட்டு மணி நேரம் வேலை செய்தோம் என, குறுகிய வட்டத்துக்குள்

இல்லாமல், மக்களுக்கு நன்மை செய்வதை லட்சியமாக கொண்டிருக்க வேண்டும்,'' என, கோவை மாநகராட்சி கமிஷனர்விஜய கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.


மாணவர் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள, "தினமலர்' நாளிதழ், பிளஸ் 2 தேர்வுக்கு பின், என்ன படிக்கலாம் என்பதற்கான ஆலோசனையை

அள்ளித்தரும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை, திருப்பூர் வித்யா கார்த்திக் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடத்தியது. பாரத் பல்கலை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழுமம்,

ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீசக்தி கல்வி நிறுவனங்கள், நேரு கல்வி குழுமம், கே.எம்.சி.எச்., - டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், நிப்ட்-டீ கல்லூரி,

ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், ஆர்.வி.எஸ்., கல்வி குழுமங்கள் ஆகியன இணைந்து, இந் நிகழ்ச்சியை வழங்கின. நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவியரு

க்கு, வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது.
"சிவில் சர்வீசஸ்' குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் பேசியதாவது:
"சிவில் சர்வீசஸ்' படிப்பு, 23 துறைகள் சார்ந்தது. இதில், போட்டி தேர்வு மிக முக்கியம். 21 வயது பூர்த்தியானவர்கள், போட்டி தேர்வு எழுதலாம். கல்லூரி முடித்த

பின், அது பற்றி யோசிக்கலாம் என, அலட்சியமாக இல்லாமல், முன்னதாகவே தயாராக வேண்டும். மற்றவற்றை விட "சிவில் சர்வீசஸ்' சார்ந்த படிப்புகளுக்கு

முக்கியத்துவம் தர காரணம், இதில் மிக சிறிய வயதிலேயே, பொறுப்புகளுக்கு வர முடியும்; சமுதாயத்துக்கு நிறைய நன்மை செய்ய முடியும். "பணிக்கு சென்÷

றாம்; எட்டு மணி நேரம் வேலை செய்தோம்' என, குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல், மக்களுக்கு நன்மை செய்வதை லட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.
இத்துறையில், முதல்கட்ட தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நுழைவு தேர்வு என, மூன்று நிலைகள் உள்ளன. முதல்கட்ட தேர்வில், தாள் 1 மற்றும் தாள் 2 என்ற

இரண்டு தேர்வு எழுத வேண்டும். வரலாறு, புவியியல், பொரு ளாதாரவியல், அறிவியல் சார்ந்த வினாக்கள் இடம் பெறும்; அன்றாட நிகழ்வுகள் பற்றிய

வினாக்களும் வரும். விடையை தேர்ந்தெடுத்து, "டிக்' செய்யும் வகையில், தேர்வு இருக்கும். இதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த பாடங்களை படித்தால்

போதுமானது.
அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, தினமும் ஒரு மணி நேரமாவது நாளிதழ் வாசிக்க வேண்டும். டைரியில், முக்கிய விஷயங்களை குறிப்பெடுக்க பழகிக்

கொள்ள வேண்டும். ஆங்கில வார்த்தைகளை தெரிந்துகொள்ள, "டிக்ஷனரி' பயன்படுத்த வேண்டும். தினமும், 10 புதிய ஆங்கில வார்த்தைகளை

கற்றுக்கொண்டால், நான்கு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் புலமை பெறலாம்.
முக்கிய தேர்வுக்கு மொத்தம், 1,750 மதிப்பெண்; இதில், 1,000 மதிப்பெண், முதல்கட்ட தேர்வில் இடம் பெற்றது போன்ற வினாக்களே இடம்பெறும். ஆனால்,

அதில் விடையை தேர்ந்தெடுத்து "டிக்' செய்வதுபோல் இல்லாமல், விடையை எழுத வேண்டும். அடுத்த, 500 மதிப்பெண்ணுக்கு, 24 பாடங்களில் ஏதாவது

ஒன்றை தேர்வு செய்து படிக்க வேண்டும். கல்லூரியில் முக்கிய பாடமாக எடுத்து படித்த வரலாறு, அறிவியல், பொருளாதாரவியல் போன்ற பாடங்களையே ÷

தர்வு செய்து கொண்டால், மதிப்பெண் பெறுவது எளிது. மீதி, 250 மதிப்பெண்ணுக்கு, பொது கட்டுரை எழுத வேண்டும். இதற்காக, சொந்த தலைப்புகளில்

கட்டுரை எழுதி பழக வேண்டும்.
பிடித்த பாடத்தை தேர்வு செய்வது, பொது அறிவு சார்ந்த விவரங்களை திரட்டுவது, ஆங்கில அறிவை மேம்படுத்துவது, பொது அறிவு சார்ந்த போட்டிகளில்

பங்கேற்பது, நண்பர்களுடன் படிப்பு குறித்து கலந்துரையாடுவது என இருந்தால், போட்டி தேர்வை சுலபமாக எதிர்கொள்ளலாம்.
இவ்வாறு, விஜய கார்த்திகேயன் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...