செவிலியர் கல்லுாரி விடுதியில் மாணவிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் !

திண்டுக்கல் அரசு செவிலியர் கல்லுாரி விடுதியில் மாணவிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் செவிலியர் கல்லுாரியும் செயல்
படுகிறது. இந்த கல்லுாரியில் 250 மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள விடுதியில் மாணவிகள்
தங்கியுள்ளனர்.மாணவிகளிடையே உடைகள், பணம் காணாமல் போனதாகக் கூறி இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதையடுத்து மோதலுக்கு காரணமாக இரண்டு மாணவிகளை விடுதியில் இருந்து விடுவித்து கல்லுாரி முதல்வர் சித்ரா
உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் அவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம். வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையில் உதவி பயிற்சியும் பெறலாம், என உத்தரவில் தெரிவித்து உள்ளார்.கல்லுாரி முதல்வர் கூறியதாவது: விடுதி வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோஷ்டி சேர்ந்து சண்டையிடுவது நல்லதில்லை. இதனால் இரண்டு மாணவிகளை விடுதியை விட்டு விடுவித்துள்ளோம். பிரச்னை செய்யும் மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...