நீதிபதிகள் எங்கே?நாடு முழுவதும், மாவட்ட நீதிமன்றங்களில், 2.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த விஷயத்தில், உ.பி., மகாராஷ்டிரா போன்று அல்லாமல், தமிழகத்தின் நிலை சற்று பரவாயில்லை. இங்கு உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், 8.68 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவற்றில், 4.20 லட்சம்
வழக்குகள், 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தான் நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவற்றில், 1.46 லட்சம் வழக்குகள் 5-10 ஆண்டுகளாக நிலுவையிலும், 40 ஆயிரம் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலும் உள்ளன.
மாவட்ட நீதிமன்றங்களில், 731 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதன்படி, ஒரு நீதிபதிக்கு சராசரியாக, 1,188 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில், சராரியாக, ஆண்டுக்கு, 220 நாட்கள் தான் கோர்ட்கள் இயங்குகின்றன. அதன்படி, ஒவ்வொரு நீதிபதியும், தினமும் சராசரியாக, 5.40 நிலுவை வழக்குகளை முடித்து வைத்தால் தான் ஓராண்டுக்குள் நிலுவை வழக்குகளை தீர்க்க முடியும். இதுதவிர, அவர்கள், புதிய வழக்குகளையும் பார்க்க வேண்டும். இது, சாத்தியமில்லாத காரியம்.
தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 2 வழக்குகளை ஒவ்வொரு நீதிபதியும் முடித்து வைக்கிறார். அதனால், கூடுதல் கோர்ட்டுகளை உருவாக்கி, புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது ஒரு வழி. கூடுதல் நீதிபதிகள் மூலம் நிலுவை சுமையை குறைக்க, தற்போதைய எண்ணிக்கையை விட, 2.5 மடங்கு கூடுதல் நீதிபதிகள் தேவை.திருப்பூர், காஞ்சிபுரம், பெரம்பலுார், திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலுவை சுமை கடுமையாக உள்ளது. உதாரணத்திற்கு, திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நீதிபதிக்குமான நிலுவை சுமை 2,049 வழக்குகள். இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
தற்போது, தமிழகத்தில் நீதி நிர்வாகத்திற்கு செலவிடப்படுவது, முன்னிருக்கும் பணிகளை ஒப்பிடும் போது, சொற்பமான தொகை தான். மொத்த பட்ஜெட் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயில் (2015-16), நீதி நிர்வாகத்திற்கு வெறும், 814 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. இதுவே, அதே ஆண்டில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
நாம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என, பாருங்கள்!