வேலை­வாய்ப்பு வைட் காலரை விட ‘புளு காலர்’ பணி­களில் அதிக ஊதியம் !!!

இந்­தி­யாவில் இன்­ஜி­னியர், எம்.பி.ஏ., பட்­ட­தா­ரி­களை விட, வாகனம், ஜவுளி உள்­ளிட்ட துறை­களில் தொழிற்­கல்வி பயின்­றோ­ருக்கு அதிக வேலை­வாய்ப்பும், கூடுதல் ஊதி­யமும் கிடைப்­ப­தாக, ‘டீம்லீஸ் சர்­வீசஸ்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பொறி­யியல் மற்றும் எம்.பி.ஏ., படித்­தோ­ருக்­கான பணிகள், ‘வைட் காலர் ஜாப்ஸ்’ எனப்­ப­டு­கின்­றன. இப்­பி­ரிவில் பெரும்­பா­லானோர், சட்டை கசங்­காமல், அழுக்கு ஆகாமல், ‘ஏசி’ அறை­களில் பணி­யாற்­றுவர்.
தொழிற்­கல்வி படித்­தோ­ருக்­கான பணிகள், ‘புளு காலர் ஜாப்ஸ்’ என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பி­ரிவில், பெரும்­பா­லா­னோரின் பணிகள், உட­லு­ழைப்பு சார்ந்­தவை. இவர்கள், வாகனம், உணவு, ஆடைகள் தயா­ரிப்பு, அழகுக் கலை போன்ற துறை­களில், திறன் சார்ந்த பணி­களை மேற்­கொள்­கின்­றனர்.

இத்­த­கையோர், பொறி­யியல் பட்­ட­தா­ரி­களை விட, 10 – 27 சத­வீதம் கூடுதல் ஊதியம் வாங்­கு­கின்­றனர். ஒரு சில பிரி­வினர், எம்.பி.ஏ., பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிக­ரான ஊதியம் பெறு­கின்­றனர். ‘‘இதில் இருந்து, இந்­தி­யாவில் திறன் சார்ந்த பணி­யா­ளர்­க­ளுக்கு தேவை அதி­க­ரித்து வரு­வதைப் புரிந்து கொள்­ளலாம். அது­மட்­டு­மின்றி, அவர்­களின் ஊதிய வளர்ச்­சியும், பொறி­யா­ளர்­களை விட அதி­க­மாக உள்­ளது. இது, திறன் சார்ந்த தொழில்­களில், ஊழி­யர்­க­ளுக்கு உள்ள பற்­றாக்­கு­றையை காட்­டு­கி­றது,’’ என, டீம்லீஸ் சர்­வீசஸ் நிறு­வ­னத்தின் மூத்த துணை தலைவர் ரிது­பர்னா சக்­ர­வர்த்தி தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­று­வனம், வாகனம், வங்கி, காப்­பீடு, மின்­னணு, உணவு பதப்­ப­டுத்­துதல், நவ­ரத்­தி­னங்கள் மற்றும் ஆப­ர­ணங்கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, சரக்கு போக்­கு­வ­ரத்து, சில்­லரை விற்­பனை, சுற்­றுலா உள்­ளிட்ட, 12 துறை­களில் ஆய்வு மேற்­கொண்­டது. அதில், பொறி­யா­ளர்­களை விட, தொழிற்­கல்வி ஊழி­யர்­க­ளுக்கு அதிக ஊதியம் வழங்­கு­வதில், வாகன துறை முத­லி­டத்தில் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
பொறி­யியல் பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்கை, தேவைக்கு அதி­க­மாக, இரு மடங்கு பெருகி உள்­ளது. தர­மற்ற கல்­வியால், வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது.
அதே­ச­மயம், தொழிற்­கல்வி பயில்வோர், எண்­ணிக்கை அதி­க­ரிக்­காமல், நிலை­யாக உள்­ளது. இது, தொழிற்­கல்வி சார்ந்த பணி­க­ளுக்கு ஆள் பற்­றாக்­கு­றையை ஏற்­ப­டுத்தி, ஊதிய உயர்­வுக்கு வழி­கோ­லு­கி­றது என, ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...